பொது செய்தி

தமிழ்நாடு

திவால் நடவடிக்கைகளை 3 வாரம் நிறுத்த வேண்டும்

Added : மே 21, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை : -'சென்னையை சேர்ந்த, அப்பு ஓட்டல் மீதான திவால் நடவடிக்கைகளை, மூன்று வாரங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும்' என, அந்நிறுவனம், தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

வர்த்தகர், பழனி ஜி.பெரியசாமிக்கு சொந்தமான, அப்பு ஓட்டல் நிறுவனம், சென்னை கிண்டியில், லீ ராயல் மெரீடியன்; கோவையில் லீ மெரீடியன் நட்சத்திர ஓட்டல்கள்; கும்பகோணத்தில், ரிவர்சைட் ரிசார்ட் மற்றும் ஸ்பா ஆகியவற்றை நடத்தி வருகிறது. இந்நிறுவனம், இந்திய சுற்றுலா நிதி கழகத்துக்கு, 17.9 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொகை, 2019 செப்., 30ல், வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது. இந்த நிதியை செலுத்தும் நிலையில், அப்பு ஓட்டல் நிறுவனம் இல்லை என்றுகூறி, திவால் நடவடிக்கைகள் மேற்கொள்ள, இந்திய சுற்றுலா நிதி கழகம் முடிவு செய்தது.

இது தொடர்பான மனுவை, தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தின், சென்னை கிளை, மே, 5ல் விசாரணைக்கு ஏற்றது. இதற்கு, அப்பு ஓட்டல் நிறுவன உரிமையாளர், பழனி ஜி.பெரியசாமி அளித்துள்ள பதில் விபரம்:ஊரடங்கு உத்தரவால், பணத்தை திரட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மூன்று வாரம் அவகாசம் கொடுத்தால், எங்கள் நிறுவனம் 8 கோடி ரூபாயை செலுத்தும். அதுவரை, திவால் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க கோரி இருக்கிறோம். இருப்பினும், ஒரு வாரத்திலேயே இத்தொகையை செலுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

கடன்களை அடைப்பதற்காக, இந்நிறுவன சொத்துக்களை விற்க, சில ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்பட்டது. ஆனால், அந்த முயற்சி தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X