பொது செய்தி

தமிழ்நாடு

மண்பாண்டங்கள் விற்பனை: ஊரடங்கு தளர்வால் துவக்கம்

Added : மே 21, 2020
Share
Advertisement
 மண்பாண்டங்கள் விற்பனை: ஊரடங்கு தளர்வால் துவக்கம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், கடைகள் திறக்க சில தளர்வுகள் அரசு வழங்கியதால், மண்பாண்ட பொருட்கள் விற்பனை மீண்டும் துவங்கியுள்ளது.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. ரோட்டோரம் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், அரசு கடைகள் திறக்க சில தளர்வுகளை அறிவித்தது. அதன் அடிப்படையில், கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, ரோட்டோரம் கடைகளும் துவங்கப்பட்டுள்ளன.மண்பாண்ட விற்பனையாளர்கள் கூறுகையில், 'கோடை காலத்தில், மண்பாண்டங்கள் விற்பனை நன்றாக இருக்கும். இதற்காக, மண்பாண்ட பொருட்களை வாங்கி வந்து, கோவை ரோட்டில் கடைகள் அமைத்து விற்பனை செய்வோம்.ஊரடங்கு உத்தரவால், ஒரு மாதத்துக்கு மேலாக கடைகள் திறக்க முடியாமல் தவித்தோம். கடந்த இரண்டு நாட்களாக கடைகள் திறந்துள்ளோம். இந்தாண்டு, ஊரடங்கால் வியாபாரம் பாதித்துள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X