மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு சலுகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு சலுகை

Added : மே 21, 2020
Share

சென்னை : அரசு பணியில் உள்ள, மாற்று திறனாளிகள், அலுவலக பணிகளை மேற்கொள்ள, வரும், 31 வரை விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், வரும், 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, மாற்றுத் திறனாளி அரசு பணியாளர்கள், அலுவலக பணிகளை மேற்கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கும்படி, மாற்று திறனாளிகள் நல இயக்குனர், அரசுக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்று, அரசு அலுவலகங்களில் பணிபுரியும், மாற்று திறனாளிகள் மட்டும், வரும், 31ம் தேதி வரை, அலுவலக பணி மேற்கொள்ள, விலக்கு அளித்து, தமிழக அரசின் தலைமை செயலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X