குப்பை கிடங்கால் குடிநீர் மாசு

Added : மே 21, 2020
Share
Advertisement

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே வேதாளை ஊராட்சியில் குஞ்சார்வலசை, நடுமுனைகாடு, இடையர் வலசை, நாடார் குடியிருப்பு, வளையர்வாடி, கூட்டசாலை உள்ளிட்ட 10 கிராமங்களில் 2000 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் வேதாளை,குஞ்சார்வலசை இடையே குளம் அருகே நீரேற்றும் மையத்தில் இருந்து மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்கின்றனர். இந்த குளம் மற்றும் சுற்றுப் பகுதியில் பிளாஸ்டிக் பை, கப்புகள், குப்பை குவிந்துள்ளது. பலர் குளத்தை குப்பை கொட்டும் கிடங்காக மாற்றி உள்ளனர்.

இதனால் குளம் மாசடைந்து மக்களுக்கு சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிக்கும் அபாயம் உள்ளது. எனவே குளம், குடிநீர் ஊற்று பகுதியில் சுகாதாரம் பாதுகாக்க கலெக்டர் வீரராகவராவ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X