மஹாவில் 41,000 கடந்த கொரோனா பாதிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மஹாவில் 41,000 கடந்த கொரோனா பாதிப்பு

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (1)
Share

மும்பை: மஹாவில் இன்று புதிதாக 2,345 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 41,642 ஆனது.



latest tamil news



இன்று மட்டும் மாநிலத்தில் 64 பேர் கொரேனாவுக்கு பலியாகி உள்ளனர். இதையடுத்து மொத்த கொரோனா பலி 1,454 ஆக உள்ளது. மஹாராஷ்டிராவில் தொடர்ந்து 5 வது நாளாக தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இதனால் 5 நாட்களில் 10,000க்கும் அதிகமானோர் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.


latest tamil news



மும்பை நகரில் மட்டும் கொரோனாவால் 25,500 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்நகரில் 882 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். புனேயில் கொரோனா பாதிப்பு 4,207 ஆக உள்ளது. அங்கு 222 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X