பொது செய்தி

தமிழ்நாடு

சொட்டு நீர் பாசன இலக்கு: ரூ.3.25 கோடி நிதி ஒதுக்கீடு

Added : மே 21, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், 580 எக்டர் பரப்பளவுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க, தோட்டக்கலைதத்துறைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வசுமதி அறிக்கை:பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் நீடிப்பதால், தோட்டக்கலை பயிர் சாகுபடிக்கு நடப்பு ஆண்டு, 580 எக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 3.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.வாழை, காய்கறி மற்றும் தென்னைகளுக்கு இடையே சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ள கோகோ உள்ளிட்ட ஊடுபயிர்களுக்கு சொட்டு நீர் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியம்; மற்ற விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. பயிர் சாகுபடிக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள், உரிய நில ஆவணங்களுடன், வடக்கு ஒன்றிய தோட்டக்கைலைத்துறை உதவி இயககுனர் அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X