பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி வளாகத்துக்கு பாதுகாப்பில்லை

Added : மே 21, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததால், 'குடிமகன்'களின் கூடாரமாகும் அவலம் நிலவுகிறது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொரோனா தடுப்புக்காக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பள்ளிகள் திறப்பதில் அரசு தெளிவான முடிவை எடுக்காமல் உள்ளது. இதனால், பள்ளிகள் பூட்டப்பட்டு உள்ளன.பொள்ளாச்சி கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில், பாதுகாவலர்கள் நியமிக்கப்படவில்லை. இதை பயன்படுத்திக் கொள்ளும் 'குடிமகன்'கள், பள்ளி வளாகங்களை மது அருந்தும் இடமாக மாற்றியுள்ளனர்.பகலிலேயே பள்ளிகளில் ஊடுருவும் 'குடிமகன்'கள், கூட்டமாக அமர்ந்து மது அருந்தி, படுத்து உருள்கின்றனர். மேலும், காலி மது பாட்டில்களை உடைத்து வீசி அட்டகாசம் செய்கின்றனர்.இதே நிலை நீடித்தால், பள்ளிகள் திறக்கப்படும் போது, பல்வேறு சேதாரங்கள் ஏற்பட்டிருக்கும். இதை தடுக்கவும், கிராமங்களில் பொது அமைதியை நிலை நாட்டவும், போலீசார் மாலை நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.பள்ளி வளாகத்தில் அத்துமீறி நுழைபவர்கள் மீது, கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டால் மட்டுமே, 'குடிமகன்'களிடம் இருந்து அரசுப் பள்ளிகளை பாதுகாக்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X