ஊரடங்கு நாட்களுக்கு சம்பளம் வழங்க கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு நாட்களுக்கு சம்பளம் வழங்க கோரிக்கை

Added : மே 21, 2020
Share

வால்பாறை:ஆனைமலை அம்பேத்கார் தோட்ட தொழிலாளர் சங்க பொதுசெயலாளர் கேசவமருகன், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. வால்பாறை தேயிலை தொழிலாளர்கள், கடந்த மார்ச், 25ம் தேதி முதல், 31ம் தேதி வரை பணிக்கு செல்லவில்லை. ஊரடங்கு நாட்களுக்கு, டான்டீ தொழிலாளர்களுக்கு, 6 நாள் சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் தனியார் தேயிலை தொழிலாளர்களுக்கு, சம்ளத்தில் பிடித்தம் செய்து, 1,250 ரூபாய் முன் பணமாக வழங்கப்பட்டுள்ளது.டான்டீ தொழிலாளர்களுக்கு வழங்கியது போன்று, தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும், சம்பளம் வழங்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X