வயல்வெளிகளில் மது அருந்தாதீங்க.. விவசாயிகள் கோரிக்கை

Added : மே 21, 2020
Share
Advertisement

ரெகுநாதபுரம்:-டாஸ்மாக் கடைக்கு சென்று மதுபானங்களை வாங்கும் போதை ஆசாமிகளில் சிலர் நெல், மிளகாய், பருத்தி, எள் சாகுபடி செய்யப்பட்ட விவசாய நிலங்களின் மத்தியில் அமர்ந்து மது அருந்துகின்றனர். பின் மது பாட்டில்களை அப்படியே போட்டும், சிலர் போதையில் பாட்டில்களை உடைத்தும் செல்கின்றனர்.

விவசாயிகள் கூறியதாவது:நெல் அறுவடை செய்த பின் கோடை மழை பெய்துள்ளதால் உழவுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாலை, இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் மது அருந்துவோரால் டிராக்டரில் கவனிக்காமல் உழவு செய்யும் போது உடைபடும் பாட்டில்கள் மருந்து தெளித்தல், களையெடுத்தல், அறுவடை சமயங்களில் விவசாயிகள், பெண்களின் கால்களை பதம் பார்த்து காயத்தை ஏற்படுத்துகின்றன. எனவே மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X