முதுகுளத்துார்:முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய கூட்டம் சமூக இடைவெளியுடன் தலைவர் தர்மர் தலைமையில் நடந்தது. துணை தலைவர் கண்ணகி, பி.டி.ஓ.,க்கள் சாவித்திரி, மங்களேஸ்வரி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
அர்ஜூனன்: பொக்கனரேந்தல், மட்டியரேந்தல் கிராமங்களில் காவிரி குடிநீர் சரியாக வருவதில்லை.
காவிரி குடிநீர் உதவி பொறியாளர் வடிவேல் முருகன்: கிராமங்களுக்கு செல்லும் வழியில் திருட்டு இணைப்புஎடுத்துள்ளனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
நாகஜோதி: சாம்பக்குளம், ஆரபத்தி, மணலுார் கிராமங்களுக்கு செல்லும் மின்கம்பிகள் எட்டித் தொடும் உயரத்தில் உள்ளதால் அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜலெட்சுமி: பூசேரி கிராமத்தில் தெருக்களில் ஒன்றிய நிதியில் சிமென்ட் சாலை அமைக்க வேண்டும்.செல்வி: கடந்த ஆண்டை விட இந்தாண்டு பருத்தி விலை பாதியாக குறைந்து உள்ளது. கொரோனாவால் கிராமங்களில் இருந்து பருத்தி ஏற்றி செல்ல வாகன வசதியின்றி தவிக்கின்றனர்.
வேளாண்மை உதவி இயக்குனர் கேசவராமன்: பருத்தியை மொத்த சந்தையில் விற்க முடியாத தால் விலை குறைந்துள்ளது. கிராமங்களில் இருந்து பருத்தி கொண்டு செல்ல வாகனத்திற்கு பாஸ் வழங்கப்படும்.
தலைவர்: தேரிருவேலி கிராமத்தில் 250 காவிரி குடிநீர் திருட்டு இணைப்புகள் போலீஸ் உதவி யுடன் அகற்றப்படும். சாம்பக்குளம் ஒன்றியத்தில் மின்கம்பிகள் சரிசெய்யபடும். கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE