பொது செய்தி

தமிழ்நாடு

அரசு இ-சேவை, ஆதார் மையங்கள் திறப்பு

Added : மே 21, 2020
Share
Advertisement
உடுமலை:உடுமலையில், இ-சேவை மற்றும் ஆதார் மையங்கள் மீண்டும் செயல்பட துவங்கின.'கொரோனா' ஊரடங்கு காரணமாக, ஆதார் மற்றும் இ-சேவை மையங்கள் மூடப்பட்டன. இதனால், சாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்கள், பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதித்தன. இந்நிலையில், அரசு அலுவலகங்கள் மீண்டும் இயங்க அரசு உத்தரவிட்ட நிலையில், உடுமலை, மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்திலுள்ள, ஆதார் மற்றும்
 அரசு இ-சேவை, ஆதார் மையங்கள் திறப்பு

உடுமலை:உடுமலையில், இ-சேவை மற்றும் ஆதார் மையங்கள் மீண்டும் செயல்பட துவங்கின.'கொரோனா' ஊரடங்கு காரணமாக, ஆதார் மற்றும் இ-சேவை மையங்கள் மூடப்பட்டன. இதனால், சாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்கள், பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதித்தன. இந்நிலையில், அரசு அலுவலகங்கள் மீண்டும் இயங்க அரசு உத்தரவிட்ட நிலையில், உடுமலை, மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்திலுள்ள, ஆதார் மற்றும் இ-சேவை மையங்கள் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளன.அதிகாரிகள் கூறுகையில்,' இ-சேவை மையங்களில், 10 பேருக்கு மட்டும் விண்ணப்பங்கள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக இடைவெளி பராமரிக்கவும், முக கவசம் அணியவும், கைரேகை பதிவின் போது, சானிடைசரும் பயன்படுத்தப்படுகிறது. அதே போல், ஆதார் மையத்திலும், தினமும், 10 பேருக்கு மட்டுமே பதிவு மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X