கீழக்கரையில் முகக்கவசம்அணியாவிட்டால் அபராதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கீழக்கரையில் முகக்கவசம்அணியாவிட்டால் அபராதம்

Added : மே 21, 2020
Share

கீழக்கரை:கீழக்கரை நகராட்சியில் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் (மாஸ்க்) அணியாதவர்களை அடையாளம் கண்டு அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் அமலுக்கு வந்தது.

கீழக்கரை நகராட்சி கமிஷனர் தனலட்சுமி கூறியதாவது:பொது இடங்களில் உலா வரும் மக்கள் முகக்கவசம் ஏதும் இன்றி வெளியே வந்தால் உடனடியாக ரூ.100 அபராதம் விதிக்கப் படுகிறது. சமூக இடைவெளியை கடைப்பிடித்து, நகராட்சிக்கும், போலீசாருக்கும் பொது மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும், என்றார். டி.எஸ்.பி., முருகேசன்,இன்ஸ்பெக்டர் தங்க கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் பூபதி ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X