பொது செய்தி

தமிழ்நாடு

இணைய வழி அறிவியல் பயிற்சி முகாம்: பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

Added : மே 21, 2020
Share
Advertisement
உடுமலை:பள்ளி மாணவர்களுக்கு, கோடைக்கால இணைய வழி அறிவியல் பயிற்சி முகாம், பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில் நடக்கிறது.'கொரோனா' வைரஸ் பாதிப்பினால், ஊரடங்கு செயல்பாட்டில் உள்ளது. வீட்டில் உள்ள குழந்தைகளை பல வழிகளிலும், தங்களின் திறன்களை மேம்படுத்திக்கொள்ள கல்விசார்ந்த பல்வேறு அமைப்புகள் போட்டிகளை நடத்தி வருகிறது. இதில் ஒன்றாக, பெரியார் அறிவியல்

உடுமலை:பள்ளி மாணவர்களுக்கு, கோடைக்கால இணைய வழி அறிவியல் பயிற்சி முகாம், பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில் நடக்கிறது.'கொரோனா' வைரஸ் பாதிப்பினால், ஊரடங்கு செயல்பாட்டில் உள்ளது. வீட்டில் உள்ள குழந்தைகளை பல வழிகளிலும், தங்களின் திறன்களை மேம்படுத்திக்கொள்ள கல்விசார்ந்த பல்வேறு அமைப்புகள் போட்டிகளை நடத்தி வருகிறது.
இதில் ஒன்றாக, பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில் கோடைக்கால அறிவியல் பயிற்சி முகாமும், ஆன்லைனில் நடக்கிறது.பயிற்சி முகாம், மே, 27 ம்தேதி முதல் 29ம்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. காலை, 10:30 மணி முதல், 11:30 மணி வரை, ஒரு மணிநேரம் நடக்கிறது. முதல் நாள் வேதியியல் செயல்பாடுகளும், இரண்டாம் நாள் அறிவியல் செயல்பாடுகள், மூன்றாம் நாள், காகித கலை செயல்பாடுகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பதிவு செய்யலாம். விருப்பமுள்ள மாணவர்கள், www.tnstc.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். பதிவு செய்வதற்கு, 25ம்தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல், தகவல்களுக்கு, tnstc.science@gmail.com என்ற முகவரியிலும், உடுமலை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளரை, 86674 85561 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு அறியலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X