அங்கன்வாடி பணியாளர்களுக்கு சத்து மாத்திரைகள் வினியோகம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அங்கன்வாடி பணியாளர்களுக்கு சத்து மாத்திரைகள் வினியோகம்

Added : மே 21, 2020
Share

உடுமலை:கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், அங்கன்வாடி மையங்கள் செயல்படாமல் உள்ளன.குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும் உணவு தடைபடாமல் இருக்க, பணியாளர்கள், குழந்தைகளின் வீடுதோறும் சென்று, அவர்களுக்கான அளவுக்கேற்ப அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கிவருகின்றனர். அங்கன்வாடி பணியாளர்கள் களப்பணியில் உள்ளனர். அவர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, எதிர்ப்புசக்தியை மேம்படுத்த, சுகாதாரத்துறை, பணியாளர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளது. உடுமலையில், 143, குடிமங்கலத்தில், 75 மற்றும் மடத்துக்குளத்தில் 77 மையங்களும் உள்ளன. மையங்களில் பணிசெய்யும், அனைத்து பணியாளர்களுக்கும், அந்தந்த ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில், சத்து மாத்திரைகள் நேற்று முதல் வினியோகிக்க துவங்கியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X