பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா: 5 பேர் டிஸ்சார்ஜ்

Added : மே 21, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:கீழக்கரை புது கிழக்கு தெருவை சேர்ந்த 50 வயது பெண்ணுக்கும், அவர் வீட்டருகில் வசிக்கும் 85வயது முதியவருக்கும் மே 10ல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மே 11ல் நம்புதாளையை சேர்ந்த 17 வயது சிறுவன், 11 வயது சிறுமி,கொட்டகுடியை சேர்ந்த கர்ப்பிணியும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.இந்நிலையில் கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது. இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக விடுபட்டு பூரண குணமடைந்து நேற்று மாலை வீடு திரும்பினர்.

தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் 19 பேர் ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவ மனைகளில் கொரோனா தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X