சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் தவறி விழுந்தவர் மீட்பு

Added : மே 21, 2020
Share
Advertisement

தியாகதுருகம்:விருகாவூர் கிராமத்தில் நள்ளிரவில் கிணற்றில் தவறி விழுந்தவரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.தியாகதுருகம் அடுத்த விருகாவூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாசாமி, 45; இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணியளவில் வயல்வெளிக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் அவரை தேடியபோது, அதே பகுதியில் உள்ள சுப்ரமணியன் என்பவரின் வயலில் உள்ள 60 அடி ஆழ பாசன கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது தெரியவந்தது.தகவலறிந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அகலம் குறைவான ஆழமான கிணறு என்பதால் 2 மணி நேரம் போராடி அய்யாசாமியை மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X