அரசு ஊழியர்களுக்கு சிறப்பு பஸ் இயக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு ஊழியர்களுக்கு சிறப்பு பஸ் இயக்கம்

Added : மே 21, 2020
Share
உடுமலை:அரசு ஊழியர்களுக்காக, உடுமலையிலிருந்து திருப்பூருக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது.'கொரோனா' ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அரசு அலுவலகங்கள் செயல்படவும், அலுவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தவும், அவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு துறை அலுவலகங்களுக்கு
 அரசு ஊழியர்களுக்கு  சிறப்பு பஸ் இயக்கம்

உடுமலை:அரசு ஊழியர்களுக்காக, உடுமலையிலிருந்து திருப்பூருக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது.'கொரோனா' ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அரசு அலுவலகங்கள் செயல்படவும், அலுவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தவும், அவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு துறை அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்களுக்காக, உடுமலையிலிருந்து திருப்பூருக்கு பஸ் இயக்கப்படுகிறது. காலை, 8:40க்கு உடுமலையிலிருந்து கிளம்புகிறது. மாலை, 6:00 மணிக்கு, திருப்பூரிலிருந்து உடுமலை வருகிறது.பஸ்சில், சமூக இடைவெளி பராமரிக்கும் வகையில், 20 பேர் மட்டுமே பயணம் செய்கின்றனர்.அதிகாரிகள் கூறுகையில்,' சிறப்பு பஸ்சில் குறைந்தளவு அரசு ஊழியர்களே வருகின்றனர். டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் முக கவசம் அணியவும், பஸ்சில் ஏறும் போது, சானிடைசர் கொண்டு கை கழுவிய பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். சமூக இடைவெளி விட்டு, அமரவைக்கப்படுகின்றனர்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X