வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு : எல்லையில் பொருட்கள் மாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு : எல்லையில் பொருட்கள் மாற்றம்

Added : மே 21, 2020
Share
 வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு : எல்லையில் பொருட்கள் மாற்றம்

உடுமலை:தமிழக- கேரளா எல்லையில், கட்டுப்பாடுகள் அதிகரிப்பால், செக்போஸ்ட் பகுதியில், சரக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டு, காய்கறி, மளிகை பொருட்கள் மாற்றப்படுகிறது.உடுமலையிலிருந்து, கேரளா மாநிலம், மறையூர், மூணாறு பகுதிகளுக்கு, மளிகை, காய்கறி, முட்டை உள்ளிட்ட உணவு பொருட்கள் அதிகளவு கொண்டு செல்லப்படுகிறது.இரு மாநில எல்லையான ஒன்பதாறு, சின்னாறு சோதனை சாவடிகளில், மருத்துவ பரிசோதனை, வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், கேரளா அரசு கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தியுள்ளதோடு, தமிழக வாகனங்களை கேரளாவுக்குள் அனுமதிப்பதில்லை.இதனால், உடுமலையிலிருந்து செல்லும் சரக்கு வாகனங்கள் அனைத்தும், மாநில எல்லையான சின்னாறு சோதனை சாவடியில் நிறுத்தப்படுகிறது. வாகனங்களில் கொண்டு செல்லப்படும் சரக்குகள் அனைத்தும் கேரளா வாகனங்களில் மாற்றப்படுகிறது. இதனால், உடுமலையிலிருந்து கேரளா செல்லும் சரக்கு வாகனங்களின் எண்ணிக்கையும், காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனையும் குறைந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X