சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி பசுமாடு பலி

Added : மே 21, 2020
Share
Advertisement

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் சிறுநாகுடி ஊராட்சி தலைவர் அரிகிருஷ்ணன். இவரது பசு மாடு சிறுநாகுடி பகுதியில் வயல் வெளியில் மேய்ச்சலுக்கு சென்றது. அப்பகுதியில் உள்ள ஊரணியில் தண்ணீர் குடிக்க சென்ற போது தண்ணீரில் மின்சாரம் பாய்ந்ததால் பசு மாடு பலியானது.

மின் கம்பத்தில் பக்கவாட்டு இழுவை கம்பி ஊரணி தண்ணீரில் இருந்த நிலையில், அதன் வழியாக தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து பசுமாடு இறந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர். உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் மின்சாரத்தை துண்டித்ததால் உயிர் பலி தவிர்க்கப்பட்டது.

ஊரணி நீரில் உள்ள மின் இழுவை கம்பியை அகற்றக் கோரி அப்பகுதியினர் மின்வாரியத்தில் பல முறை புகார் செய்தும் அதிகாரிகளின் அலட்சியத்தால், பசுமாடு பலியானதாக தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X