பொது செய்தி

தமிழ்நாடு

சூடு பிடிக்குது தென்னந்தடுக்கு தொழில்: ஊரடங்கில் இருந்து மெல்ல மீள்கிறது

Added : மே 21, 2020
Share
Advertisement
 சூடு பிடிக்குது தென்னந்தடுக்கு தொழில்: ஊரடங்கில் இருந்து மெல்ல மீள்கிறது

ஆனைமலை:தமிழகத்தின் சில பகுதிகளுக்கு தென்னந்தடுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுவதால், முடங்கியிருந்த தென்னந்தடுக்கு தொழில் மீண்டும் சூடுபிடித்துள்ளது.பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், தென்னை மரத்தில் இருந்து வீணாகும் ஓலையில் தடுக்கு தயாரிக்கப்படுகிறது.
கோடை வெயிலை சமாளிக்க வீட்டின் மேற்கூரை அமைக்க, குடிசை அமைக்க, சுப நிகழ்ச்சிகள், கோழிப்பண்ணை, டீ எஸ்டேட்டுகளில் மறைப்பு அமைக்க, வெங்காயம் பட்டறை அமைக்க தென்னந்தடுக்கு பயன்படுகிறது.இங்கு, தயாராகும் தென்னந்தடுக்கு, தஞ்சை, நாகப்பட்டிணம், திருவாரூர், சீர்காழி, சிதம்பரம், பெரம்பலுார், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கும்; செங்கல் சூளைகளுக்காக கேரளாவுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.தடுக்கு பின்னுவது, பாரம் ஏற்றுவது, தென்னை ஓலை எடுப்பது என, நேரடியாகவும், மறைமுகமாகவும் தினமும், 700 குடும்பங்கள் இத்தொழில் மூலம் ஜீவனம் செய்கின்றனர்.இந்நிலையில், ஊரடங்கால் தடுக்கு விற்பனை முற்றிலுமாக முடங்கி, உற்பத்தி குறைந்தது. இதனால், தொழிலாளர்கள், வியாபாரிகள் வேலையிழந்து கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு ஏற்பட்டுள்ளதால், மீண்டும் தடுக்கு விற்பனை சூடுபிடித்துள்ளது.வேட்டைக்காரன்புதுாரை சேர்ந்த தென்னந்தடுக்கு விற்பனையாளர் நடராஜ் கூறியதாவது:தென்னந்தடுக்கு கொண்டு செல்ல அனுமதிச்சீட்டு தேவை என்பதால், தடுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு தொழில் முடங்கியது.விவசாயம் சார்ந்த பொருட்கள் கொண்டு செல்ல எவ்வித அனுமதியும் பெற வேண்டாமென அரசு அறிவித்த பின், தடுக்கு விற்பனை துவங்கியுள்ளது.
முதற்கட்டமாக, சிதம்பரம், மாயவரம், சீர்காழி பகுதிகளுக்கு தடுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. அதிக கொரோனா பாதிப்புள்ளதால் கோவை, திருப்பூர், சென்னை மற்றும் கேரள மாநில பகுதிகளுக்கு விற்பனை செய்ய முடியவில்லை.சில பகுதிகளுக்கு மட்டுமே தடுக்கு செல்வதால், தேவை குறைந்து, ஒரு லோடு தடுக்கு, இரண்டாயிரம் ரூபாய் வரையில் விலை குறைந்துள்ளது. ஊரடங்கால் பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில், 40 சதவீதம் வரையில் உற்பத்தி குறைந்துள்ளது.கொரோனா பரவல் குறைந்தவுடன், தஞ்சை, நாகப்பட்டிணம், திருவாரூர் உள்பட அனைத்து பகுதிகளுக்கும், தடுக்கு விற்பனைக்காக அனுப்பப்படும், உற்பத்தியும் அதிகரிக்கும்.இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X