சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காட்டெருமை தாக்கி தொழிலாளி காயம்

Added : மே 21, 2020
Share
Advertisement

வால்பாறை:வால்பாறை அருகே, வீட்டிற்கு நடந்து சென்ற முதியவர், காட்டெருமை தாக்கியதில் படுகாயமடைந்தார்.வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட்களில், காட்டெருமைகள் அதிகம் உள்ளன. சின்கோனா டான்டீ சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதியை சேர்ந்த, பணி ஓய்வு பெற்ற தொழிலாளி பாஸ்கரன்,66, நேற்று முன் தினம் மாலை, 5:30 மணிக்கு சின்னகல்லார் டேமில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்றார்.அப்போது, எதிரே வந்த காட்டெருமை அவரை முட்டி துாக்கி வீசியது. படுகாயமடைந்தவர், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் நடராஜ், மற்றும் வனத்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X