ரயில் சேவையை பயன்படுத்துங்க: நிர்வாகம் வழிகாட்டுதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரயில் சேவையை பயன்படுத்துங்க: நிர்வாகம் வழிகாட்டுதல்

Added : மே 21, 2020
Share

பொள்ளாச்சி:ஜூன், 1ம் தேதி முதல் இயங்க உள்ள ரயில்களில் பயணிக்க, பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து பாலக்காடு ரயில்வே கோட்டம் வழிகாட்டியுள்ளது.மத்திய அரசு வரும் ஜூன், 1ம் தேதி முதல் படிப்படியாக ரயில் சேவையை துவக்க உள்ளதாக அறிவித்துள்ளது. முதல் கட்டமாக, புலம் பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்புவதற்கான சிறப்பு ரயில்கள் தவிர்த்து, வழக்கமான முன்பதிவு நடைமுறையுடன் ரயில்கள் வரும் ஜூன், 1ம் தேதி முதல் இயக்கப்படுகிறது.அரசின் அடுத்த கட்ட அறிவிப்புக்கு ஏற்ப, வழக்கமான ரயில் இயக்கம் அறிவிக்கப்படும். தற்போது இயக்கப்படும் ரயில்களில் பயணிக்க விரும்புவோர், ஐ.ஆர்.டி.சி., இணையதளம் அல்லது செல்போன் செயலி மூலம் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். டிக்கெட் கவுன்டர்கள் செயல்படாது.அதிகபட்சமாக பயண தேதிக்கு, 30 நாட்களுக்கு முன் இருந்து முன்பதிவு செய்யலாம். தற்போது இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில்களில், மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டண சலுகை உள்ளிட்ட, 11 வகையான சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.நேற்று காலை, 10:00 மணி முதல் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே ரயில்வே ஸ்டேஷனுக்குள் அனுமதிக்கப்படுவர். ரயிலில் வழக்கமான போர்வைகள் உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்பட மாட்டாது.பயணிகள், மருத்துவ பரிசோதனை, நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு, பாலக்காடு ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு துறை வழிகாட்டியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X