சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி சித்தா டாக்டர் குண்டர் சட்டத்தில் கைது

Added : மே 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக வதந்தி பரப்பிய, போலி சித்தா டாக்டர் திருத்தணிகாசலம், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை, கே.கே.நகரைச் சேர்ந்தவர், திருத்தணிகாசலம், 50; போலி சித்தா டாக்டர். இவர், 'பேஸ்புக்' உள்ளிட்ட சமூகவலைதளங்களில், கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக, 'வீடியோ'க்கள் வெளியிட்டு, வதந்தி பரப்பி

சென்னை : கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக வதந்தி பரப்பிய, போலி சித்தா டாக்டர் திருத்தணிகாசலம், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சென்னை, கே.கே.நகரைச் சேர்ந்தவர், திருத்தணிகாசலம், 50; போலி சித்தா டாக்டர். இவர், 'பேஸ்புக்' உள்ளிட்ட சமூகவலைதளங்களில், கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக, 'வீடியோ'க்கள் வெளியிட்டு, வதந்தி பரப்பி வந்தார்.இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர், சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேனியில் பதுங்கி இருந்த, திருத்தணிகாசலத்தை கைது செய்து, பூந்தமல்லி சிறையில் அடைத்துள்ளனர்.

இவரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று, திருத்தணிகாசலத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
22-மே-202004:01:45 IST Report Abuse
வாய்மையே வெல்லும் Many fake doctors giving long episodes of patient recovered success stories which may be true or untrue just to gain popularity. You can see these advertisements in TV Programs.of Private channels. Investigate that too..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X