சாராயம் கடத்திய6 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாராயம் கடத்திய6 பேர் கைது

Added : மே 21, 2020
Share

சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே சாராயம் கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்து105 லிட்டர் சாரா யத்தைக் கைப்பற்றினர்.சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன்உத்தரவின் பேரில்சப் இன்ஸ்பெக்டர் சவுகத் அலி சங்கராபுரம் அடுத்த தெத்துக்காடு சோதனைச் சாவடியில் வாகன சோதனை மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக வந்த நபர்களிடம் இருந்த பையை சோதனை செய்ததில் பாக்கெட் சாராயம் இருப்பது தெரியவந்தது.விசாரணையில், வடபாலபட்டு பழனி மகன் ரமேஷ், 33; புது பாலப்பட்டு ராஜேந்திரன் மகன் தனசேகர், 33; சுப்ரமணி மகன் அருள், 29; நாராயணன் மகன் அய்யனார், 29; பழனி மகன் சின்னதுரை, 30; சுப்ரமணி மகன் சின்னராசு, 27; ஆகிய 6 பேரை கைது செய்து, 105 லிட்டர் சாராயம் மற்றும் ஒரு பைக்கையும்பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X