பொது செய்தி

தமிழ்நாடு

'ஸ்டேஷனரி' கடைகள் திறக்க அனுமதி கிடைக்குமா?

Added : மே 21, 2020
Share
Advertisement

சென்னை : பாடப் புத்தகம் மற்றும் கல்வி உபகரண பொருட்கள் விற்பனை கடைகளை திறக்க, தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கு மேலாக, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வீடுகளில் உள்ளனர். கல்லுாரி மாணவர்களுக்கு, 'ஆன்லைனில்' வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பள்ளி மாணவர்களுக்கு, தற்போது கோடை விடுமுறை என்பதால், பாடங்கள் நடத்த வேண்டிய தேவையில்லை. இந்நிலையில், வீட்டில் இருக்கும் பிள்ளைகள், மொபைல் போன், 'டிவி' போன்றவற்றை அதிகமாக பயன்படுத்துகின்றனர். அதனால், குழந்தைகளுக்கு வேறு பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க, தனித் திறன்களை வளர்க்க வேண்டும் என, உளவியல் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள் மற்றும் அறிவியல், நகைச்சுவை, ஆங்கிலப் புத்தகங்கள் படிக்கலாம் என, ஆலோசனை தரப்பட்டுள்ளது.ஓவியம் வரைதல், கட்டுரை எழுதுதல், வண்ணம் தீட்டுதல், அறிவியல் ரீதியான செய்முறைகளை மேற்கொள்வது என, கூடுதல் திறன்களை வளர்க்கவும் ஆலோசனை கூறியுள்ளனர்.மாணவர்கள், இந்த திறன்களை வளர்க்க, அவர்களுக்கு புத்தகங்கள், 'ஸ்டேஷனரி' பொருட்கள் போன்றவை தேவைப்படுகின்றன.

இரண்டு மாதமாக, ஊரடங்கு அமலில் இருந்ததால், ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த பொருட்களும் காலியாகி விட்டன.எனவே, புதிய பொருட்களை வாங்கும் வகையில், பாடப் புத்தகங்கள், அறிவியல், கதை புத்தகங்கள் மற்றும் ஸ்டேஷனரி பொருட்கள் விற்கும் கடைகளை திறக்க, அரசு அனுமதிக்க வேண்டும் என, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X