இந்தியாவுக்கு 7 புதிய தூதர்கள் நியமனம் ; 'டிஜிட்டல்' முறையில் ஜனாதிபதி அங்கீகாரம்

Added : மே 21, 2020
Share
Advertisement
 இந்தியாவுக்கு 7 புதிய தூதர்கள் நியமனம் ; 'டிஜிட்டல்' முறையில் ஜனாதிபதி அங்கீகாரம்

புதுடில்லி : ஏழு நாடுகளைச் சேர்ந்த துாதர்களுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக அங்கீகாரம் வழங்கினார்.

வட கொரியாவின், சோ ஹூய் சோல்; செனகல் குடியரசின், அப்துல் வகாப் ஹைதரா; டிரினிடாட் மற்றும் டோபாகோ குடியரசின், ரோகர் கோபால் ஆகியோர், இந்தியாவுக்கு துாதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும், மொரீஷியஸ் நாட்டின், சாந்தி பாய் ஹனுமன்ஜி; ஆஸ்திரேலியாவின், பேரி ராபர்ட் ஓபேரல்; கோடே டெல்வோர் நாட்டின், மென்ட்ரி எரிக் கமிலி; ருவாண்டாவின், ஜாக்குலின் முகன்கிரா ஆகியோரும், இந்தியாவுக்கு துாதர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்களின் நியமனத்திற்கு அங்கீகாரம் வழங்கும் விழா, வழக்கமாக ராஷ்டிரபதி பவனில் நடைபெறும்.

வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர், காரில் துாதரை அழைத்து வருவார். ராஷ்டிரபதி பவன் வாசலில், துாதருக்கு வரவேற்பு அளிக்கப்படும். அவர் நாட்டின் தேசிய கீதத்தை, பேண்டு வாத்திய குழுவினர் இசைப்பர். அதன் பின், துாதருக்கு, ஜனாதிபதி அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால், தற்போது, கொரோனா பரவல் காரணமாக, வழக்கத்திற்கு மாறாக, முதன் முறையாக, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஏழு நாட்டு துாதர்களுக்கும், ஜனாதிபதி அங்கீகாரம் அளித்தார். சவுத் பிளாக்கில், துாதர்கள், தங்கள் நாடு வழங்கிய நியமன பத்திரத்தை வாசிக்க, அவர்களுக்கு, பெரிய திரை வாயிலாக, ராஷ்டிரபதி பவனில் இருந்து, ராம்நாத் கோவிந்த், அங்கீகாரம் வழங்கினார்.

இது குறித்து, ஜனாதிபதி மாளிகை, 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ள செய்தியில், 'முதன் முறையாக, 'டிஜிட்டல்' முறையில், வெளிநாட்டு துாதர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது. 'கொரோனாவின் சவாலை சமாளிக்க, டிஜிட்டல் தொழில்நுட்பம் உதவியுள்ளதாக, ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X