பொது செய்தி

தமிழ்நாடு

ஓவியர்களுக்கு அ.தி.மு.க., நிவாரண உதவி வழங்கல்

Added : மே 21, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் நகர, ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் ஓவியர்களுக்கு கொரோனா நிவாரண உதவி பொருட்கள் வழங்கப்பட்டது.திருக்கோவிலுார் நகர, ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், ஊரடங்கு உத்தரவால் வேலை இழந்து தவிக்கும் ஓவியர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி கட்ட கோபுர வீதி, திறந்தவெளி மைதானத்தில் நடந்தது.ஒன்றிய செயலாளர் பழனி முன்னிலை வகித்தார். நகர செயலாளர் சுப்பு, சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமை தாங்கி அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண உதவி பொருட்களை வழங்கினர்.போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல், நகர அவைத்தலைவர் ஜெயபால், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் சம்பத், நிர்வாகிகள் ராணி, ரவி, சக்திவேல், பாலு, செல்வராஜ், பாலாஜி, சிவா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அசோக் உட்பட பலர் பங்கேற்றனர்.திருக்கோவிலுார், அரகண்டநல்லுார், மணலுார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஓவியர்கள் இதன் மூலம் பயனடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X