சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி மணல் அள்ளியஜே.சி.பி., இயந்திரம் பறிமுதல்

Added : மே 21, 2020
Share
Advertisement

சின்னசேலம்; சின்னசேலம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய ஜே.சி.பி., இயந்திரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.சின்னசேலம் அடுத்த எலவடி ஏரியில் அரசு அனுமதியில்லாமல் மணல் அள்ளுவதாக பொதுப்பணி துறைக்கு தகவல் கிடைத்தது. சின்னசேலம் பாசன உதவியாளர் ராஜ்மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ஜே.சி.பி. இயந்திரம் மூலம் 2 டிப்பர் லாரிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தது தெரியவந்தது.அதிகாரிகளைப் பார்த்ததும் மணல் அள்ளிக்கொண்டிருந்த நபர்கள் 2 டிப்பர் லாரிகளையும் எடுத்து கொண்டு தப்பினர். உடன் அதிகாரிகள் ஜே.சி.பி. இயந்திரத்தை மட்டும் பறிமுதல் செய்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.ராஜ்மோகன் கொடுத்த புகாரின் பேரில் தப்பியோடிய இரண்டு டிப்பர் லாரி டிரைவர்கள் மற்றும் ஜே.சி.பி. உரிமையாளரை சின்னசேலம் போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X