ரூ.7.64 கோடி இழப்பீடு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Added : மே 21, 2020
Share
Advertisement

புதுடில்லி : கர்நாடகாவில், 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு, 7.64 கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க, 'ஏர் இந்தியா' விமான நிறுவனத்திற்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த, 2010, மே, 22ல், துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம், கர்நாடகாவின் மங்களூரில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது. அதில் பயணித்த, 166 பயணியரில், 158 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த விபத்தில், மஹேந்திரா கோத்கனி என்பவர் உயிரிழந்தார். ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள நிறுவனத்தின் பிராந்திய இயக்குனராக பணியாற்றி வந்த இவருக்கு, மனைவியோடு, ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். தன் கணவரின் இறப்பிற்காக, கோத்கனியின் மனைவி, தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம், நஷ்ட ஈடு கோரி முறையிட்டார்.

இதை விசாரித்த ஆணையம், கோத்கனியின் குடும்பத்திற்கு, 7.35 கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க, ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. ஆனால், ஆணையம் அறிவித்த நஷ்ட ஈடு போதாது என, கோத்கனியின் மனைவி, உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் சந்திரசூட், அஜய் ரஸ்தோகி அடங்கிய அமர்வு, இழப்பீடு தொகையை, 7.64 கோடி ரூபாயாக உயர்த்தி நேற்று உத்தரவிட்டுள்ளனர். மேலும், செலுத்த வேண்டிய தொகையின், ஒரு ஆண்டிற்கான, 9 சதவீத வட்டியையும் சேர்த்து, ஏர் இந்தியா விமான நிறுவனம் செலுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X