பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் சமூக இடைவெளியுடன் ஆட்டோக்களை இயக்க அனுமதி

Added : மே 21, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சமூக இடைவெளியுடன் ஆட்டோக்களை இயக்க அனுமதி கோரி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.மாவட்ட செயலாளர் செந்தில் தலைமையில் கள்ளக்குறிச்சி கலெக்டர் கிரண் குராலாவிடம் அளித்துள்ள மனு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3000க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு பெற்று இயங்கி வருகின்றன. கடந்த மார்ச் 24 முதல் தமிழக அரசு கொரோனா தடுப்பு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனால் கடந்த 58 நாட்களாக ஆட்டோக்களை இயக்காமல், அரசு அறிவித்த உத்தரவை ஏற்று ஊரடங்கை கடைபிடித்து வருகிறோம்.இதனால் எவ்வித வருவாயும் இல்லாமல் நாங்கள், கட்ட வேண்டிய தினச் சீட்டு, வார சீட்டு, மாத சீட்டு மற்றும் ஆட்டோக்களுக்கான பைனான்ஸ் உள்ளிட்ட கடன்களைக் கட்ட முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம்.தொடர்ந்து 58 நாட்களாக நிறுத்தி வைத்துள்ள ஆட்டோக்களை பராமரித்து மீண்டும் சாலையில் ஓட்டுவதற்கு பல ஆயிரம் பணம் தேவை என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழக அரசு நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு மட்டும் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள வெறும் 10 சதவீத தொழிலாளர்கள் மட்டுமே பயனடை முடியும்.மீதமுள்ள 90 சதவீத ஆட்டோ தொழிலாளர்களுக்கு எந்தவிட நிவாரணமும் கிடைக்கவில்லை. எனவே, தமிழக அரசு முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு நல வாரியத்தில் பதிவு செய்த, செய்யாத அனைவருக்கும் தலா 2,000 ரூபாய் உதவித் தொகை அறிவித்துள்ளதை போன்று, நல வாரியத்தில் பதிவு பெறாத எங்களுக்கும் 15 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும்.மேலும் சமூக இடைவெளியுடன் ஆட்டோக்களை இயக்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும். அரசு வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் பெற்ற கடன், இன்சூரன்ஸ், எப்.சி., சாலை வரி உள்ளிட்ட கட்டணங்களை தள்ளுபடி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X