கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே நின்னையூர் முன்னாள் ஊராட்சி தலைவரை தாக்கிய சப் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்ககோரி எஸ்.பி.,யிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.இது குறித்து முன்னாள் ஊராட்சி தலைவர்கள் மலையரசன் பெருமாள், முனுசாமி, ரகுபதி, பாலசுப்ரமணியன், நாராயணன், பரமசிவம், கோவிந்தராஜ் ஆகியோர் எஸ்.பி., ஜெயச்சந்திரனிடம் அளித்த புகார் மனு:கள்ளக்குறிச்சி அடுத்த நின்னையூரைச் சேர்ந்த சுப்ரமணியன், முன்னாள் ஊராட்சி தலைவர். இவர் மீது எவ்வித வழக்கும் இல்லை.கடந்த 17ம் தேதி கொட்டையூரில் கடையில் பொருட்கள் வாங்கி சென்ற வீரமணி என்பவரை அதே பகுதியை சேர்ந்த மூவர் மதுபோதையில் தாக்கினர். இதனை வீரமணி உறவினர், பாண்டியராஜ் தடுத்துள்ளார்.இது தொடர்பாக அன்று மாலை வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் பாண்டியராஜ் மட்டுமின்றி பிரச்னைக்கு தொடர்பில்லாத முத்துகருப்பன் என்பவரையும் அழைத்துச் சென்றனர்.இது குறித்து, விவரம் கேட்கச் சென்ற சுப்ரமணியனை கொட்டையூரில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் திட்டி, தாக்கி போலீஸ் நிலைம் அழைத்துச் சென்று இரவு முழுவதும் வைத்து, மறுநாள் வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.இதனால், உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்ட சுப்ரமணியன், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். நன்மதிப்புடன் வாழ்ந்து வந்த முன்னாள் ஊராட்சி தலைவர் சுப்ரமணியனை தாக்கி அவமானப்படுத்திய சப் இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் ஊராட்சி தலைவர் சுப்ரமணியனும், எஸ்.பி.,யிடம் தனியாக புகார் மனு அளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE