சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கைகலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி புகார்

Added : மே 21, 2020
Share
Advertisement

விழுப்புரம்; மோசடியான வாரிசு சான்றிதழ் மூலம் நிலத்தை அபகரித்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் அடுத்த தொடர்ந்தனுாரைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி பொன்னம்மாள், 85; கொடுத்துள்ள மனு;எனது மாமனார் கிரயம் பெற்ற 1 ஏக்கர் 5 சென்ட், நிலத்தை என் உறவினர் ஒருவர் மோசடியான வாரிசு சான்றிதழ் மூலம் எழுதப்படிக்க தெரியாக என்னிடம் கைநாட்டு பெற்று அபகரித்துக்கொண்டார். இது குறித்து, வழக்கறிஞர் மூலம் கடந்த 2019ம் ஆண்டு கலெக்டருக்கு அறிவிப்பு அனுப்பியிருந்தேன்.அதன் மீது விழுப்புரம் ஆர்.டி.ஓ., விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணைக்கு ஐந்து முறை சம்மன் அனுப்பிய நிலையில், நான் ஆஜரானேன். ஆனால், அதிகாரிகள் இல்லாமல் இருப்பதும், அதிகாரிகள் இருந்தால் மோசடி செய்த நபர் ஆஜராகாமல் இருப்பதும் வாடிக்கையாக உள்ளது.எனவே, லஞ்சம் பெற்றுக்கொண்டு வாரிசு சான்றிதழ் கொடுத்த தொடர்ந்தனுார் வி.ஏ.ஓ., மற்றும் வளவனுார் ஆர்.ஐ., விழுப்புரம் தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். எனது நிலத்தை மீட்டுத்தர வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X