பொது செய்தி

இந்தியா

'பாசிட்டிவ்' எண்ணம் கிடைத்தது!

Added : மே 22, 2020
Share
Advertisement
 'பாசிட்டிவ்' எண்ணம் கிடைத்தது!

நடிகர் கமல் ஹாசனின் மகள், நடிகை ஸ்ருதி: மூன்று மாதங்களுக்கு முன் தான், மும்பையில் புது வீட்டுக்கு மாறினேன். நானும், செல்லமாக வளர்த்து வரும் பூனைக்குட்டி, கிளாராவும் தான், இந்த வீட்டில் இருக்கிறோம்.இந்த வீடு, என் ரசனைக்கு ஏற்ற மாதிரி இருக்கும். வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளும், ஆசை ஆசையாய் பார்த்து, வாங்கி, 'செட்' பண்ணியிருக்கேன். தங்கை அக்ஷராவும், சென்னை வீட்டில், தனியாகத் தான் இருக்கா. அப்பாவும் தனியாகத் தான் இருக்கிறார். அம்மா, மும்பையில் அவங்க வீட்டில் இருக்காங்க. எல்லார் கூடவும், தொடர்புல இருக்கேன்; தினமும் போனில் பேசிட்டிருக்கோம்.

டெக்னாலஜி வசதிகள் இப்போது, எல்லார் கிட்டயும் இருப்பதால், அதிகமாக யாரையும், 'மிஸ்' பண்ற மாதிரி தெரியல. ஆனால், திரும்பவும் எப்போது வேலைக்குப் போவேன்னு இருக்குது. எனக்கு தேவையான எல்லா சந்தோஷத்தையும், வேலை தான் கொடுக்குது.என் நண்பர்கள் நிறைய பேர், அமெரிக்காவில் இருக்காங்க. அவங்க கூட, 'வீடியோ கால்' மூலமாக, இரவு நேரத்தில், நீண்ட நேரம் பேசுகிறேன்.நாங்கள் எல்லாரும் சேர்ந்து, 'ட்யூன்' போடுறது, பாடல் வரிகள் எழுதுறதுன்னு, 'பிசி' தான். அதிகாலை, 3:௦௦ மணி வரைக்கும் இதிலேயே போய் விடும். அமெரிக்காவில் இருக்கும் நண்பர்களும், கொரோனாவால் ரொம்ப கஷ்டப்படுறாங்க.

சினிமாவில் என்னோட நெருங்கிய பிரெண்ட் நடிகை தமன்னா.மும்பையில், என் வீட்டுக்கும் அவங்க வீட்டுக்கும், ரெண்டு தெரு தான் இடைவெளி. இருந்தும் நாங்கள், 'மீட்' பண்ண முடியலை. கொரோனா துவங்கிய காலத்தில், வெளிநாட்டில் இருந்து நான் வந்ததால், என்னை நானே தனிமைப்படுத்திக் கிட்டேன். மும்பை கார்ப்பரேஷன்ல இருந்து வந்து என்னை, 'செக்' பண்ணுனாங்க; ஸ்டாம்ப் போட்டுட்டுப் போனாங்க. எல்லாமே முறையா பண்ணுனாங்க. மக்களைப் பார்க்கும் போது, ரொம்ப கஷ்டமாக இருக்குது. எனக்குன்னு வீடு இருக்கு; சாப்பாடு கிடைக்குது. ஆனா, நிறைய பேர், பாலத்துக்கு அடியில் படுத்திருக்காங்க;

சாப்பாடு இல்லாம கஷ்டப்படுறாங்க. ஊருக்குப் போக, ரயில் இல்லாமல், அவஸ்தைப்படுறாங்க. மும்பையில எத்தனையோ மக்களை, இப்படிப் பார்க்க முடியுது. எந்த அளவுக்கு, என்னால் இவங்களுக்குப் பண உதவி செய்ய முடியுமோ, அதை பண்ணிட்டு வரேன். ஆன்லைனில் சிலருக்குப் பணம் அனுப்பி வெச்சிருக்கேன். வாழ்க்கையில் நடக்குற ஒவ்வொரு விஷயத்தையும் அனுபவமாக எடுத்துப்பேன். சில விஷயங்கள் சரியாக பண்ணியிருப்பேன். சில விஷயங்கள் தப்பாக பண்ணியிருப்பேன்.

நடுவுல, ஒரு சின்ன இடைவெளி எடுத்துட்டு, திரும்ப சினிமாவுக்கு வந்தேன். அந்த, 'பிரேக்' எனக்கு ரொம்ப உதவியாக இருந்திருக்குது. அந்த பிரேக் தான், எந்த விஷயத்தையும், 'பாசிட்டிவ்' கண்ணோட்டத்தில் பார்க்கச் சொல்லிக் கொடுத்திருக்குது!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X