தமிழ்நாடு

மாறுகிறது! சின்னசேலம் ரயில் நிலையம் ஜங்ஷனாக...விரிவாக்கம் மற்றும் சீரமைப்பு பணி தீவிரம்

Added : மே 22, 2020
Share
Advertisement

சின்னசேலம்: சின்னசேலம் ரயில் நிலையம் 'ஜங்ஷனாக' (சந்திப்பு) மாற உள்ளதால் சுற்றுச்சுவர், தரைதளம் மற்றும் மேற்கூரை அமைக்கும் பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது.தெற்கு ரயில்வே, சேலம் கோட்டத்தில் உள்ள சின்னசேலம் ரயில் நிலையம், மூன்று நடைமேடைகளை கொண்டது. இவ்வழியாக சென்னை, கோவை, புதுச்சேரி, யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட 14 ரயில்கள் தினசரி செல்கின்றன. விருத்தாசலம் ரயில் நிலையம் வழியாக சென்னை, கடலுார், புதுச்சேரி, திருச்சி பகுதிகளுக்கு ரயில் வசதி உள்ளது.புதிதாக உருவாகியுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் ரயில் நிலையம் கடலுார், விழுப்புரம், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை இணைக்கிறது. கள்ளக்குறிச்சியில் ரயில் நிலையம் இல்லாத நிலையில், சின்னசேலம் ரயில் நிலையத்தை மேம்படுத்துவதன் மூலம் கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட மக்களுக்கு எளிதில் ரயில் போக்குவரத்து வசதி கிடைக்கும்.இந்த ரயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும் 2,000க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள், பொதுமக்கள் சென்னை, சேலம், நாகப்பட்டிணம், பெங்களூரு, மங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.மேலும் ஆந்திரா, கர்நாடகா வெளிமாநில உணவு கிடங்கிலிருந்து சரக்கு ரயில்கள் மூலம் ரேஷன் அரிசி கொண்டு வரப்பட்டு சின்னசேலம் ரயில் நிலையத்திலிருந்து, சேலம், கள்ளக்குறிச்சி, கடலுார், விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டத்திற்கு அனுப்பப்படுகிறது.மேலும் மாதம் தோறும் யூரியா மூட்டைகளை ஏற்றி வரும் ஒரு ரயிலும், ஆண்டுக்கு ஒரு முறை சர்க்கரை ஆலைக் கழிவுகள் கொண்டு வரும் ரயிலும் இங்கு வந்து செல்கின்றன.கள்ளக்குறிச்சி மாவட்டமாக தரம் உயர்ந்ததையொட்டி, சின்னசேலம் ரயில் நிலையமும் விரைவில் 'ஜங்ஷனாக' மாற்றமடைய தயாராகி வருகிறது. இதனால் இங்கு ஏராளமான ரயில்கள் நின்று செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ரயில்களின் வருகை அதிகரித்தால் பயணிகளின் வருகையும் அதிகரிக்கும் என்பதால் சின்னசேலம் ரயில் நிலையத்தை தரம் உயர்த்தும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கியது.அதன்படி இங்குள்ள முதல் மற்றும் மூன்றாம் நடைமேடைகள் ஒரு அடி உயர்த்தப்பட்டு உபயோகத்தில் இருந்து வருகிறது. மேலும் தற்போது இரண்டாம் நடைமேடையும் உயர்த்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து சுற்றுச்சுவர், மேற்கூரை அமைக்கும் பணிகளும் படுவேகமாக நடந்து வருகிறது.இது குறித்து ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் ஒருவர் கூறுகையில், 'வாஜ்பாய் ஆட்சியில், மத்திய ரயில்வே இணை அமைச்சராக இருந்த மூர்த்தி, சின்னசேலம் - கள்ளக்குறிச்சி இடையே புதிதாக ரயில் பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார். அதில், பிற மாநில, மாவட்டங்களுக்கு சின்னசேலத்திலிருந்து ரயில்கள் செல்லும் அளவுக்கு, ரயில் நிலையத்தை மேம்படுத்தவும், ரயில் பாதைகளை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அந்த சமயத்தில் நிதி பற்றாக்குறை காரணமாக இந்த திட்டம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.தற்போது, மத்திய, மாநில அரசுகள் இணக்கமுடன் இருப்பதால், சின்னசேலம் - கள்ளக்குறிச்சி இடையே புதிய ரயில் பாதை அமைக்கவும், சின்னசேலம் ரயில் நிலையத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க முடியும். இதன் மூலம் புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தொழில் மற்றும் வணிக வளர்ச்சியை மேம்படுத்தலாம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X