பொது செய்தி

தமிழ்நாடு

தற்காலிக பிரசவ வார்டில் கிருமி நாசினி தெளிப்பு

Added : மே 22, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தற்காலிக பிரசவ வார்டு பகுதியில், நாள்தோறும் நான்கு முறை கிரிமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மகப்பேறு வார்டு இயங்கி வருகிறது. அதேபோல், சுற்று வட்டார கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கர்ப்பிணி பெண்கள் மாதாந்திர பரிசோதனை மற்றும் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். இது தவிர தனியார் மருத்துவமனையிலும் பிரசவத்திற்காக பலர் சிகிச்சைக்கு சென்று வருகின்றனர்.இந்நிலையில், கொரோனா தொற்று அச்சத்தினால், கடந்த சில வாரங்களாக ஒரு சில ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு தற்போது கர்ப்பிணி பெண்களின் வருகை அதிகரித்துள்ளன. பிரசவத்திற்காக வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மகப்பேறு வார்டில் இட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதனையொட்டி, மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கட்டடம் தற்போது, கூடுதல் பிரசவ வார்டுகளாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இக்கட்டத்தில் அனுமதித்துள்ள கர்ப்பிணி பெண்களை பார்வையிட அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பலர் வந்து செல்கின்றனர். இதனையொட்டி, காலை 8:30 மணி, பகல் 12:00 மணி, மாலை 3:00 மணி மற்றும் இரவு 8:00 மணி என தற்காலிக பிரசவ வார்டு பகுதியில் நாள்தோறும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X