மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.புதுப்பட்டைச் சேர்ந்தவர் செல்வகுமார் மகன் அருண்குமார், 20; இவர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த பொன்னுசாமி மகன் மாரிமுத்து, 28; என்பவர் அருண்குமார் மீது மோதுவது போல் வந்தார்.இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், மாரிமுத்து இவரது தந்தை பொன்னுசாமி, சகோதரி சத்யா, 33; ஆகியோர் சேர்ந்து அருண்குமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில், மாரிமுத்து கத்தியால் அருண்குமார் வயிற்றில் குத்தினார்.இதுகுறித்து அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் 3 பேர் மீது வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து மாரிமுத்துவை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE