தகராறில் கத்தியால் குத்தியவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தகராறில் கத்தியால் குத்தியவர் கைது

Added : மே 22, 2020
Share
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.புதுப்பட்டைச் சேர்ந்தவர் செல்வகுமார் மகன் அருண்குமார், 20; இவர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த பொன்னுசாமி மகன் மாரிமுத்து, 28; என்பவர் அருண்குமார் மீது மோதுவது போல் வந்தார்.இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.புதுப்பட்டைச் சேர்ந்தவர் செல்வகுமார் மகன் அருண்குமார், 20; இவர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த பொன்னுசாமி மகன் மாரிமுத்து, 28; என்பவர் அருண்குமார் மீது மோதுவது போல் வந்தார்.இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், மாரிமுத்து இவரது தந்தை பொன்னுசாமி, சகோதரி சத்யா, 33; ஆகியோர் சேர்ந்து அருண்குமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில், மாரிமுத்து கத்தியால் அருண்குமார் வயிற்றில் குத்தினார்.இதுகுறித்து அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் 3 பேர் மீது வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து மாரிமுத்துவை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X