பொது செய்தி

தமிழ்நாடு

கோட்டை ஊழியர்கள் நாட்டாமை: பிற அலுவலக ஊழியர்கள் அவதி

Added : மே 22, 2020
Share
Advertisement

சென்னை : பஸ்சில் பணிக்கு வருவது தொடர்பாக, தலைமைச் செயலக ஊழியர்களுக்கும், மற்ற துறை ஊழியர்களுக்கும் இடையே, மோதல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், மே, 18 முதல், அரசு அலுவலகங்கள், 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட்டு வருகின்றன. அரசு ஊழியர்கள், அலுவலகம் செல்வதற்காக, அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படுகின்றன.பஸ்சில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக, ஒரு இருக்கையில், ஒருவர் மட்டுமே அமர அனுமதிக்கப்படுவதால், பஸ் வசதி போதுமானதாக இல்லை. இதனால், ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.சென்னையில், தலைமைச் செயலகத்திற்கு, வெவ்வேறு இடங்களில் இருந்து, பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அந்த பஸ்களில், மற்ற அலுவலகங்களில் பணிபுரிவோரும் செல்லலாம் என, அறிவிக்கப்பட்டது . ஆனால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளிலிருந்து வரும் பஸ்களில், தலைமை செயலக ஊழியர்கள் மட்டும் ஏறிக்கொண்டு, மற்ற துறை ஊழியர்களை தடுப்பதாக, புகார் எழுந்தது.இது குறித்து, அரசு ஊழியர்கள் சிலர் கூறியதாவது : ஒரு பஸ்சில், எத்தனை பேர் செல்ல முடியுமோ, அத்தனை தலைமைச் செயலக ஊழியர்கள், ஒன்றாக இணைந்து, அவர்களைத் தவிர, மற்றவர்களை ஏற விடுவதில்லை. வராதவர்களையும், போன் செய்து வரவழைக்கின்றனர்.

போக்குவரத்து கழக ஊழியர்களும், அவர்கள் கூறுவதை ஏற்பதால், மற்ற அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள், பணிக்கு செல்வது சிரமமாக உள்ளது. எனவே, தலைமைச் செயலக ஊழியர்களுக்கு தனியாகவும், மற்ற அலுவலக ஊழியர்களுக்கு தனியாகவும், பஸ்களை இயக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X