கொரோனாவால் இறப்பு விகிதம் குறைவு: சுகாதாரத்துறை பெருமிதம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கொரோனாவால் இறப்பு விகிதம் குறைவு: சுகாதாரத்துறை பெருமிதம்

Updated : மே 23, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (4)
Share
கொரோனாவால் இறப்பு விகிதம் குறைவு: சுகாதாரத்துறை பெருமிதம்

புதுடில்லி :'கொரோனாவால் உலகில் இறப்பு விகிதம் 6.65 ஆக உள்ள நிலையில் இந்தியாவில் இறப்பு விகிதம் 3.06 ஆக உள்ளது. உரிய நேரத்தில் பாதிக்கப்பட்டோரை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதால் இறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது' என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் இறப்பு விகிதம் குறைந்தே காணப்படுகிறது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3435 ஆக உள்ளது. இதில் 64 சதவீதம் பேர் ஆண்கள்; 36 சதவீதம் பேர் பெண்கள். இதில் 0.5 சதவீதம் பேர் 15 வயதுக்கு உட்பட்டோர்; 2.5 சதவீதம் பேர் 15-30 வயதுக்கு உட்பட்டோர்; 11.4 சதவீதம் பேர் 30-45 வயதுக்கு உட்பட்டோர்; 35.1 சதவீதம் பேர் 45-60 வயதுக்கு உட்பட்டோர்; 50.5 சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டோர்.

உலகில் இறப்பு விகிதம் 6.65 ஆக உள்ள நிலையில் இந்தியாவில் இறப்பு விகிதம் 3.06 ஆக உள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்தாலும் அதிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது; இறப்பு விகிதம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு காரணம் மத்திய மாநில அரசுகள் எடுத்துவரும் உரிய நடவடிக்கைகளே ஆகும். சரியான நேரத்தில் பாதிக்கப்பட்டோரை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்படுவதால் இறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X