தனிமைப்படுத்த வேண்டும்!

Added : மே 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 தனிமைப்படுத்த வேண்டும்!

பயங்கரவாதம் என்பது மனித குலத்துக்கும், உலக அமைதிக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல். இதற்கு எதிரான போரில், பாதுகாப்புப் படையினர் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு மக்களும் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் மற்றும் துாண்டிவிடும் நாடுகளை, உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும்.

- வெங்கையா நாயுடு , துணை ஜனாதிபதி

வரவேற்கிறோம்!

வெளிமாநிலத் தொழிலாளர்களும் மனிதர்களே. அவர்கள் நம்முடைய சகோதரர்கள். மாநிலத்துக்கு திரும்பி வரும் வெளிமாநிலத் தொழிலாளர்களை, திறந்த மனத்துடன் வரவேற்கிறோம். அவர்களால், 'கொரோனா' வைரஸ் பரவுவதாகக் கூறுவதை நிறுத்துங்கள். அவர்கள் இல்லாத இடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லையா?

- சிவராஜ் சிங் சவுகான் , மத்திய பிரதேச முதல்வர், பா.ஜ.,

திட்டத்துடன் வாருங்கள்!

அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும், சில கட்டுப்பாடுகளுடன் துவங்கியுள்ளன. இந்நிலையில், சினிமா ஷூட்டிங்கை துவக்க, சமூக விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் எப்படி செயல்படுவது என்பது குறித்த திட்டத்துடன் வரும்படி, திரைத்துறையினரிடம் கூறியுள்ளேன்.

- உத்தவ் தாக்கரேமஹாராஷ்டிர முதல்வர், சிவசேனா

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
22-மே-202016:12:17 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN மிகவும் உண்மைதான் . பயங்கரவாதத்தை வேரறுக்கனும் .அப்போதான் வாழமுடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X