வாழைத்தார் விலை சரிவு: விவசாயிகள் கவலை

Added : மே 22, 2020
Share
Advertisement
 வாழைத்தார் விலை சரிவு:  விவசாயிகள் கவலை

உடுமலை:ஊரடங்கு காரணமாக, வாழைத்தாரின் விலை சரிந்துள்ளதால், உடுமலை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.உடுமலை ஏழு குள பாசனப்பகுதிகளில், பரவலாக வாழை சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள், கேரளா மூணாறு, மறையூர் உட்பட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தது. ஊரடங்கு காரணமாக பிற மாநிலங்களுக்கு, காய்கறிகள் செல்வது வெகுவாக பாதித்துள்ளது.அதனால், வாழைத்தார்களின் கொள்முதல் விலையும் குறைந்துள்ளது. நேந்திரன் கிலோ, 20 ரூபாய் முதல், 30 ரூபாய் வரையும், பஜ்ஜி தயாரிப்புக்கு பயன்படும், வாழைக்காய் விலை கிலோ 10 ரூபாய் வரையும் குறைந்துள்ளது.விவசாயிகள் கூறுகையில், 'அனைத்து பகுதிகளிலும், பேக்கரிகள் முழுவதுமாக திறக்கப்படவில்லை. இதனால், வாழைக்காய்களின் கொள்முதல் விலை சரிந்துள்ளது. மறையூருக்கு வாழைத்தார்கள் செல்லும் போது நிலையான விலை கிடைத்து வந்தது. பலத்த காற்று இப்பகுதியில் வீசத்துவங்கியுள்ளதால், வாழைத்தார்களை உடனடியாக அறுவடை செய்து, விற்பனை செய்து வருகிறோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X