ஒரே நாளில் 5,604 பேருக்கு கொரோனா

Added : மே 22, 2020
Share
Advertisement

புதுடில்லி : நாடு முழுதும், கடந்த, 24 மணி நேரத்தில், 5,604 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 132 பேர் பலியானதாகவும், மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நம் நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மஹாராஷ்டிரா முதலிடம்வைரஸ் பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும், புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறித்தும், மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: கடந்த, 24 மணி நேரத்தில், புதிதாக, 5,604 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; 132 பேர் கொரோனா தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். இதையடுத்து, கொரோனாவால் பாதிக் கப்பட்டோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 12 ஆயிரத்து, 359 ஆகவும்; பலி எண்ணிக்கை, 3,435 ஆகவும் அதிகரித்துள்ளன.

கொரோனாவில் இருந்து குணமடைந்து, 45 ஆயிரத்து, 299 பேர் வீடு திரும்பியுள்ளனர். குணம்அடைந்தவர்கள் சதவீதம், 40 சதவீததமாக உள்ளது. நேற்று பலியான, 132 பேரில், அதிகபட்சமாக, மஹாராஷ்டிராவில் மட்டும், 65 பேர் இறந்து உள்ளனர். குஜராத்தில், 30; மத்திய பிரதேசத்தில், ஒன்பது; டில்லியில், எட்டு; ராஜஸ்தான், உத்தர பிரதேசத்தில், தலா, நான்கு; மேற்கு வங்கம், தமிழகத்தில், தலா, மூன்று பேர் இறந்துள்ளனர்.

மொத்த பலி எண்ணிக்கையிலும், மஹாராஷ்டிரா முதலிடத்தை பிடித்துள்ளது. அந்த மாநிலத்தில் மட்டும் இதுவரை, 1,309 பேர் கொரோனாவில் இறந்துள்ளனர். பாதிப்பு உறுதி குஜராத்தில், 749; ம.பி.,யில், 267; மேற்கு வங்கத்தில், 253; டில்லி யில், 176 பேர் இறந்துஉள்ளனர். தமிழகத்தில் இதுவரை, 87 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையிலும், 39 ஆயிரத்து, 297 பேருடன், மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில், 13 ஆயிரத்து, 191 பேர்; குஜராதில், 12 ஆயிரத்து, 537 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

பரிசோதனை எண்ணிக்கை1,000 மடங்கு அதிகரிப்புசுகாதார அதிகாரிகள் கூறியதாவது: கொரோனா பரிசோதனை எண்ணிக்கை, துவக்கத்தில் குறைவாக இருந்தது. கடந்த இரண்டு மாதங்களில், பரிசோதனை, 1,000 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த, 20ம் தேதி வரை, நாடு முழுதும், 25.12 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. தினமும், ஒரு லட்சம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், நாடு முழுவதற்கும், மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் செயல்படும் பரிசோதனை மையம் மட்டுமே இருந்தது. தற்போது, 555 பரிசோதனை மையங்கள் இயங்குகின்றன.

நம் மருத்துவர்களும், பரிசோதனை மைய ஊழியர்களும், சுகாதார ஊழியர்களும், கொரோனா தடுப்பு பணியில், ஓய்வின்றி கடுமையாக உழைத்து வருகின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X