பொது செய்தி

தமிழ்நாடு

கிருமி நாசினி தெளிக்க வசதி இரும்பு ஸ்டாண்ட் அமைப்பு

Added : மே 22, 2020
Share
Advertisement
 கிருமி நாசினி தெளிக்க வசதி இரும்பு ஸ்டாண்ட் அமைப்பு

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு சார்பதிவாளர் அலுவலகத்தில், கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சார்பதிவாளர் அலுவலகங்களில், தண்ணீரால் சோப்பு போட்டு கை கழுவிய பின், கைகளுக்கு கிருமி நாசினி மருந்து தடவி சுத்தப்படுத்திய பிறகே, பத்திரப்பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.தினமும், ஒரு மணிநேரத்திற்கு, 10 'டோக்கன்'கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அதிகளவில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வரவாய்ப்புள்ளது.அலுவலகம் வரும் அனைவரும், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வசதியாக, அலுவலக நுழைவாயிலில் இரும்பு ஸ்டாண்ட் அமைத்து, கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளது.பத்திர பதிவுக்கு உள்ளே செல்லும் பொதுமக்கள் கிருமி நாசினி இரும்பு ஸ்டாண்டை, கால் மூலம் அழுத்தினால், கைகளுக்கு கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.கைகளை நன்றாக சுத்தப்படுத்திய பின், உள்ளே சென்று பத்திரப்பதிவு செய்யலாம். இதற்காக கிருமி நாசினி இரும்பு ஸ்டாண்ட் மாநிலம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X