அம்மா மண்டபத்துக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அம்மா மண்டபத்துக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி

Added : மே 22, 2020
Share
 அம்மா மண்டபத்துக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், அம்மா மண்டபத்துக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி நடக்கிறது.பொள்ளாச்சி -- கோவை ரோட்டில், சி.டி.சி., மேட்டில், எம்.பி., தொகுதி நிதி உள்பட, இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில், அம்மா திருமண மண்டபம் கட்டும் பணி துவங்கப்பட்டது.அனைத்து வசதியுடன் மண்டபம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட திருமண மண்டபம் கடந்தாண்டு திறக்கப்பட்டது. குறைந்த வாடகையில், 'ஆன்லைன்' முன்பதிவு அடிப்படையில் மண்டபம் வழங்கப்படும், என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஊரடங்கு காரணமாக, சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் பாதிக்கப்பட்டன. தற்போது, மீண்டும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. அம்மா மண்டபத்துக்குள் வளர்ந்துள்ள புதர்களை அப்புறப்படுத்தி துாய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X