தேர்வுக்கு தயாராகும் பள்ளிகள்: தூய்மை பணிகள் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேர்வுக்கு தயாராகும் பள்ளிகள்: தூய்மை பணிகள் துவக்கம்

Added : மே 22, 2020
Share

உடுமலை:பத்தாம் வகுப்பு தேர்வுக்கான முன்னேற்பாடுகள் அனைத்து பள்ளிகளிலும் துவங்கியது.பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடத்ததப்படும் என, அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், தேர்வுக்கான ஏற்பாடுகள் அனைத்து பள்ளிகளும் வேகமாக நடந்து வருகின்றன.திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம், 349 பள்ளிகள் தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம், 30 ஆயிரத்து, 602 பேர் தேர்வெழுத உள்ளனர். இவர்களின் பாதுகாப்புக்காக, தேர்வு மையங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி துவங்கியது. ஒரு வகுப்பறைக்கு, 10 மாணவர்கள் எழுதும் வகையில், இருக்கைகள் அமைக்கும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதால், அனைத்து ஆசிரியர்களும் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X