கால்வாய் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.13.93 கோடி அரசு நிதி ஒதுக்கீடு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கால்வாய் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.13.93 கோடி அரசு நிதி ஒதுக்கீடு

Added : மே 22, 2020
Share

உடுமலை:திருமூர்த்தி, அமராவதி பாசன திட்டங்களில், குடிமராமத்து திட்டத்தின் கீழ், 13.93 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 132 பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.உடுமலை வருவாய் கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில், பி.ஏ.பி., மற்றும் அமராவதி பாசனத்திட்டத்தின் கீழ் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. தமிழக அரசு, கடந்த, 2016 முதல், குடிமராமத்து திட்டத்தின் கீழ், பாசன கால்வாய்கள், குளம், குட்டைகள் சீரமைப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.இதில், பி.ஏ.பி., பாசன திட்டம், திருமூர்த்தி கோட்டத்தின் கீழ், 45 பணிகளுக்காக, 4 கோடியே 47 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமராவதி பாசன திட்டத்தில், 26 பணிகளுக்காக, 3.30 கோடி ரூபாயும்; குதிரையாறு வடிநிலத்தில், ஒரு பணிக்கு, 25 லட்ச ரூபாய் நிதியும், ஆழியாறு வடிநிலத்தில், 54 பணிகளுக்கு, 5 கோடி ரூபாய் என, திருப்பூர் மாவட்டத்தில், மொத்தம், 132 பணிகளுக்கு, 13.93 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.திட்ட பணிகள் நேற்று, குடிமங்கலம் ஒன்றியம், சிக்கனுாத்து பகுதியிலுள்ள பி.ஏ.பி., கிளை வாய்க்கால் பகுதியில் துவக்கி வைக்கப்பட்டது. கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.திட்ட நிதியில், வாய்க்காலில் முட்புதர்களை அகற்றுதல், துார்வாரி சுத்தப்படுத்துதல், சேதமடைந்துள்ள குறுக்கு கட்டங்களை சீரமைத்தல்,பழுதடைந்த மடை, ஷட்டர்களை புதுப்பித்தல், வாய்க்கால் மற்றும் குளங்களின் கரைகளை வலுப்படுத்துதல் உட்படபணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X