சென்னை : ஊரடங்கு தளர்வால், மின் தேவை அதிகரித்து வருவதால், தமிழகத்திற்கு ஒதுக்கிய நிலக்கரியை, மீண்டும் வழங்கக் கோரி, நிலக்கரி அமைச்சகத்தை, மின் வாரியம் வலியுறுத்தி உள்ளது.
உற்பத்திதமிழக மின் வாரியத்திற்கு, 4,320 மெகா வாட் திறனில், ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில், தினமும் பயன்படுத்த தேவைப்படும், 72 ஆயிரம் டன் நிலக்கரியில், 60 ஆயிரம் டன், ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள மத்திய தொகுப்பில் இருந்து பெறப்படுகிறது. மீதி, தனியாரிடம் வாங்கப்படுகிறது. ஊரடங்கால், ஏப்ரலில், தமிழக மின் தேவை, 11 ஆயிரம் மெகா வாட்டிற்கு கீழ் சென்றது. இதனால், அனல் மின் நிலையங்களில், 600 மெகா வாட் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.
மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்திற்கு, சரக்கு ரயில்கள், கப்பல்களில், தினமும் சராசரியாக, 40 ஆயிரம் டன் நிலக்கரி அனுப்பப்பட்டு வந்தது.அதை பயன்படுத்தாமல், வாரியம் சேமித்தது. இம்மாத முதல் வாரத்தில், அனல் மின் நிலையங்களில், 23 நாட்கள்; எண்ணுார், துாத்துக்குடி துறைமுகங்கள் மற்றும் கப்பல்களில், 10 நாட்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பு வைக்கப்பட்டது. அதற்கு மேல் சேமிக்க இடம் இல்லாததால், நிலக்கரி சப்ளையை குறைக்க கோரி, மத்திய நிலக்கரி அமைச்சகத்திற்கு, மின் வாரியம் கடிதம் எழுதியது.இதனால், மத்திய தொகுப்பில் இருந்து நிலக்கரி சப்ளை நிறுத்தப்பட்டது.
வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதிகளில், ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில், மின் தேவை அதிகரித்து வருகிறது. சீசன் துவங்கியும், 15ம் தேதி வரை, காற்றாலைகளில் இருந்து, அதிக மின்சாரம் கிடைக்காததால், தினமும், 2,000 மெகா வாட்டிற்கு மேல் அனல் மின் உற்பத்தி செய்யப்பட்டது; நிலக்கரி இருப்பு குறைய துவங்கியது.20 ஆயிரம் டன் நிலக்கரிசில தினங்களாக, காற்றாலை மின்சாரம் அதிகம் கிடைக்கிறது. ஊரடங்கு தளர்வால், இனி ஆலைகள், வணிக நிறுவனங்கள், முழு வீச்சில் செயல்படும் என்பதால், மின் தேவையும் வழக்கத்தை விட, அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே, அனல் மின் நிலையங்களில் முழு மின் உற்பத்தி செய்யும் வகையில், தயார் நிலையில் வைக்க, மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்திற்கு ஒதுக்கிய நிலக்கரியை வழங்குமாறு, நிலக்கரி அமைச்சகத்திடம், மின் வாரியம் வலியுறுத்தியுள்ளது.இதையடுத்து, தற்போது, தினமும் சராசரியாக, 20 ஆயிரம் டன் நிலக்கரி அனுப்பப்பட்டு வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE