பொது செய்தி

தமிழ்நாடு

அரசு ஊழியர்களுக்காக சென்னையில் 280 பஸ்கள்

Added : மே 22, 2020
Share
Advertisement

சென்னை : அரசு ஊழியர்களுக்காக, சென்னையில், 280 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன

சென்னையில், தலைமை செயலகம், உயர்நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள், 18ம் தேதி முதல், 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படுகின்றன. அவர்கள் அலுவலகம் செல்லும் வகையில், பல்வேறு பகுதிகளில் இருந்து, மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், 200 பஸ்கள் இயக்கப்படுகின்றன.இதுதவிர பல்வேறு துறைகளின் கோரிக்கையை ஏற்று, நேற்று முன்தினம் முதல், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம், பள்ளி கல்வி இயக்குனரகம் உள்ளிட்ட அலுவலகங்களில் பணியாற்றுவோருக்காக, கூடுதலாக, 30 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அதேபோல, விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருத்தணி, திருவள்ளூர், வேலுார், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து, சென்னைக்கு, 50 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள், தலைமை செயலம், எழிலகம் உள்ளிட்ட அலுவலக ஊழியர்களை அழைத்து வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X