எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

'தமிழக அரசு விண்ணப்பித்தால் : கோவையில் கேந்திரிய வித்யாலயா!'

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
தமிழகஅரசு, கோவை, கேந்திரிய வித்யாலயா, ராஜா, ரமேஷ் பொக்ரியால்

'தமிழக அரசு, உரிய முறையில் விண்ணப்பித்தால், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நீலகிரி லோக்சபா தொகுதி எம்.பி.,யான ராஜாவுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ரமேஷ் பொக்ரியால் அனுப்பியுள்ள கடிதம்:

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைத்து தரும்படி, லோக்சபாவில் கோரிக்கை விடுத்தீர்கள். அதுபற்றி, ஆய்வு செய்து பதில் தரும்படி, கேந்திரிய வித்யாலயா சங்கதன் அமைப்புக்கு உத்தரவிடப்பட்டது. அந்த அமைப்பு அளித்த அறிக்கையில், 'மேட்டுப்பாளையத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைத்து தரும்படி, தமிழக அரசின் சார்பில், இதுவரை, எந்த கோரிக்கையும் வரவில்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளி அமைக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், கேந்திரிய வித்யாலயா சங்கதனுக்கு, மாநில அரசே நேரடியாக, விண்ணப்பம் சமர்ப்பிக்க வழியுள்ளது. அனைத்து விதிமுறைகளும், முறையாக பூர்த்தி செய்யப்பட்டிருந்தால், 'சேலஞ்ச் மெத்தேட்' வாயிலாக, இதற்கென உள்ள, செயலக தலைமையின் கீழ் செயல்படும் குழு, உடனடியாக பரிசீலனை செய்யும்.எனவே, தமிழக அரசிடமிருந்து உரிய முறையில் கோரிக்கை வந்தால், கேந்திரிய வித்யாலயா சங்கதன் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில்,
உடனடியாக, உரிய நடவடிக்கைகள் துவங்கப்படும்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

இதுபற்றி, ராஜா எம்.பி., கூறியதாவது: மத்திய அமைச்சரிடம் இருந்து, கடிதம் வந்திருப்பது உண்மையே. மேட்டுப்பாளையத்தில் பள்ளி அமைந்தால், கோவை மட்டுமல்லாது, அருகிலுள்ள, ஈரோடு, திருப்பூர் மாவட்ட மாணவர்களுக்கும் பேருதவியாக இருக்கும். மத்திய அமைச்சரின் கடித நகலை, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளேன். முன்னுரிமை தந்து, விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார். - நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
23-மே-202013:33:42 IST Report Abuse
தமிழ்வேள் கே வி பள்ளிகளில் எம் பி கோட்டா உண்டு ..அதை ஒரு சில இடங்களில் விற்றும் காசு பார்க்கிறார்கள் ..நவோதயா பள்ளிகளில் சிபாரிசு செல்லாது ..நுழைவு தேர்வு உண்டு அதான் நவோதயா எதிர்க்கப்படுகிறது ..சில்லறை காரணமாக கே வி எதிர்க்கப்படுவதில்லை
Rate this:
Cancel
22-மே-202019:09:48 IST Report Abuse
ஆப்பு ஆன்லைன் கேந்திரிய வித்யாலயா ஆரம்பிச்சுருங்க. கல்வித் துறையில் பெதிய மாற்றம் வரும்னு ஐயா சொல்லிட்டாரே...
Rate this:
Cancel
Lt Col M Sundaram (Retd) - Thoothukudi 628 008 ,இந்தியா
22-மே-202017:57:52 IST Report Abuse
Lt Col M Sundaram (Retd) Kendriya vidyala is required in Thoothukudi also. Thoothukudi MP gave a press note in this regard but what action is taken further is not known. In addition to Navodhayala School is also required for Thoothukudi dist. Dist Collector may also take up the case with the govt.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X