சிவகங்கை மாவட்ட தொழிலாளர் நலத்துறை மூலம் கட்டுமான, அமைப்பு சாரா தொழிலாளர்கள், முறைசாரா தொழிலாளர்கள் என 64 தொழில்களில் ஈடுபடுவோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
கொரோனா ஊரடங்கால் 53 நாட்களாக கட்டுமான பணிகள், வாகன போக்குவரத்து உள்ளிட்ட தொழில் முடங்கியது. இதனால், ஆட்டோ டிரைவர்கள், கட்டுமான தொழிலாளர்கள் வருவாய் இன்றி தவித்தனர்.இவர்களது வாழ்வாதாரம் காக்க தமிழக அரசு தொழிலாளர் நலத்துறை மூலம் பதிவு பெற்ற உறுப்பினருக்கு 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, பாமாயில் மற்றும் ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கியது.
ஆட்டோ டிரைவர்களுக்கு நிவாரணம் கோரி சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வீரையா, பொது செயலாளர் விஜயகுமார் ஆகியோர் போராட்டம் நடத்தி கலெக்டர் ஜெயகாந்தனிடம் மனு அளித்தனர்.
பதிவை புதுப்பித்தால் நிவாரணம்
கலெக்டர் கூறியதாவது:ஆட்டோ டிரைவர்கள் 2 ஆயிரத்து 12 பேர் தொழிலாளர் நலத்துறையில் பதிவு செய்துள்ளனர். ஆனால், 802 பேர் மட்டுமே முறையாக உறுப்பினர் அட்டை பதிவு புதுப் பித்தல் பணிகளை மேற்கொண்டுள்ளனர். மற்றவர்கள் முறையாக உறுப்பினர் அட்டை பதிவை புதுப்பிக்கவில்லை. இதனால், அவர்கள் அரசின் கொரோனா நிவாரண தொகை பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர்.
இனியும் தாமதிக்காமல், பழைய உறுப்பினர் அட்டையை புதுப்பித்தால் அரசுக்கு பரிந்துரைத்து நிவாரணம் பெற்றுத்தரப்படும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE